மகேந்திரகுமார் (மாச்சா)
அன்புள்ள ராசுக்குட்டி அண்ணா,
நீங்கள் உடலால் எங்களை விட்டுப் பிரிந்தாலும், உங்கள் நினைவுகள் என் இதயத்தில் என்றும் மறையாமல் வாழும்.
நம்முடைய இனிமையான சிறுவயது நினைவுகள் தொடங்கி, லண்டனில் நாம் சந்தித்த ஆரம்பகாலப் போராட்டங்கள் முதல் இறுதி வரை, உங்களுடனும் குடும்பத்தினருடனும் நான் பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு தருணமும் இன்று என் கண்முன் வந்து செல்கின்றன. எல்லோரையும் மதித்து, அன்போடு அரவணைத்து, எப்போதும் உதவிக்கரம் நீட்டும் தூய்மையான உள்ளம் உங்களுடையது.
உங்களைப் போன்றவர்கள்தான், தங்கள் அன்பாலும் அவ்வப்போது வெளிப்படும் அழகான குறும்புத்தனத்தாலும் இந்த உலகை அழகாக்குகிறார்கள்.
உங்கள் பிரிவு எனக்கு அளவற்ற வேதனையைத் தருகிறது. ஆனால், நீங்கள் விட்டுச் சென்ற நினைவுகளும், என் மீது நீங்கள் வைத்திருந்த பாசமும் நம்பிக்கையும் என்றென்றும் அழியாது.
என் வாழ்நாள் முழுவதும் உங்களை அன்போடு நினைவுகூர்வேன்.
உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏
2026-05-27 18:15:25
ஜெயந்தி (Kumar)
அன்புள்ள ராசுக்குட்டி அத்தான்,
என் கணவரின் அன்பு நிறைந்த அண்ணா நீங்கள் எங்கள் குடும்பத்தினருடன், பிள்ளைகளுடன் நீங்கள் பகிர்ந்துகொண்ட தருணங்கள் எங்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றன.
உங்கள் பிரிவு எங்களுக்கு மிகுந்த வேதனையை தருகிறது. ஆனால் நீங்கள் விட்டுச் சென்ற அன்பும் நினைவுகளும் என் மீது நீங்கள் வைத்திருந்த பாசமும் நம்பிக்கையும் என்றும் அழியாது.
நாங்கள் உங்களை எப்போதும் அன்புடன் நினைத்துக்கொண்டே இருப்போம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 🙏
2026-05-27 20:08:11
Poovarasan (Kumar)
Rest in peace Periyappa💗🙏
2026-05-27 20:16:14
யோகராஜா குடும்பம் (பாபு)
எங்கள் அன்பு ராசுக்குட்டியின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களும், ராச்குட்டியின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !
2026-05-27 22:26:18
Vigneswaran (Friend )
Deeply saddened to hear about the passing of Rasukutty.
I have known him from our young days in VVT through Makendrakumar. He was always a kind, caring, patient, and sensible person. I still remember when we were around 10 years old, he patiently allowed Mahendrakumar to drive the van while we all sat inside enjoying the ride. Even at that young age, his calm and understanding nature stood out.
Later in London, I had the opportunity to work with him at Europa Food, Gloucester Road branch, where I was the manager. Rasukutty was always polite, respectful, and hardworking, with excellent customer service skills. Customers constantly praised him for his kindness and friendly manner.
He was truly a gentle soul who touched many lives and will be greatly missed by everyone who knew him.
My heartfelt condolences to his family and loved ones during this difficult time.
May his soul rest in eternal peace. 🙏
2026-05-27 22:57:34
சேதுமாதவன் (கண்ணன்/சேது)
சிறுவயதில் என் உயிரைக்காத்த நண்பர் (அண்ணா)🙏.
1987 இறுதி அல்லது 88 ஆரம்பத்தில் ஒருநாள் காட்டுவளவு கடலில் குளிக்கப்போன நாம் வந்த ஒரு வள்ளத்தில் ஏறி வெள்ளைக் கடற்கரைக்கு கிட்டவர, குதித்து நீந்தவென-அரைகுறை நீச்சல் தெரிந்தநான் கடலில் அவருடன் பாய, அவர் எனக்கென தனது சாரத்தில் பொம்மல் செய்து எனக்குப்பக்கத்திலேயே நீந்திக்கொண்டு வந்தார்.
அப்போது அவர் “கண்ணா ஏதாவது சிரமம் வந்தால் எனது தோளைப்பிடித்துக் கொண்டு நீந்து. பயப்படாதே👍 “ எனச் சொன்னார்.
கொஞ்சத்தூரம் நீந்த என்னால் ஏலாமல் போய்விட்டது. அவர் சொன்னமாதிரி அவரது தோளை ஒரு கையால் தொட்டுக்கொண்டு நீந்தினேன். அவருக்கே உரியபாணியில் “கண்ணா பயப்படாதே, பொம்மல் அவிழ்ந்தால் இரண்டு பேரும் தாளவேண்டிவரும்“ என்று பதற்றப்படாமல் சொல்லி என்னை பயப்படவிடாமல் - பம்பலாக ஏதோ கதைத்துக்கொண்டு கரைவரை கொண்டுவந்து விட்டார்.
சிறுவயதில் ஒன்றாக திரிந்த நாட்களில் இருந்து எமது லண்டன் வாழ்க்கைவரை நான் அவரை ஒருமுறைகூட சீரியசாக பார்க்கவில்லை. அனைத்தையும் பம்பலாக கடந்து சென்றுவிடுவார்.
அவரைப்போல வாழ்வை இலகுவாக எடுக்க வேண்டும் என நான் பலமுறை நினைத்ததுண்டு.
சாந்தி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
அன்னார் ஆன்மா சாந்தியடைய நெடியகாட்டு பிள்ளையாரை வணங்குகிறேன்.🙏
போய்வாருங்கள் அண்ணா
-உங்கள் தம்பி.
2026-05-28 00:45:03
ரவிச்சந்திரன் (Ravi)
அன்புத் தம்பியின் ஆத்மா
சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏
2026-05-28 03:47:09
Babu (Family friend)
I have known Rasukkutty since his childhood. He was a very kind-hearted person and someone who could easily get along with everyone in a cheerful way.
His loss is unbelievable
I pray to God that Rasukkutty’s soul may rest in peace.
2026-05-28 08:53:56
Lakshaki (Laki)
Rasukutty mama,it saddens me to hear that you are no longer here. You were someone I knew from childhood and grew up together with your beautiful wife and children.It's an honour to have met such a loving,kind soul.You would always light up any room you walked into and I'll never forget your cheeky smile,it was definitely contagious and so adorable! God bless your soul,may you now rest in peace,you'll never be forgotten.🙏🕊️🌹
2026-05-28 18:31:48
இந்திராணி (குட்டி இளையம்மா)
வெள்ளயாய் மனம் பிள்ளையாய்
குணம் கொண்டு ;
குட்டிளையம்மா என்றெனைக் கனிவோடு அழைக்கும்
குறும்புக்காரப் பிள்ளை நீ ;
தூர தேசத்தில் இருந்தாலும்
தொலைபேசியில் அழைத்து அன்பு காட்டும் பிள்ளை நீ ; இன்று சட்டென்று
மறைந்துவிட்டாய்
எமை விட்டு
வாடி நிற்கிறோம் - நின்
வண்ண முகம் எண்ணியெண்ணி
2026-05-29 10:03:59
Amir (Friend of Naveen)
My thoughts and prayers are with the Nadarajah family during this difficult time. May this hardship come with ease. 🕊️
2026-05-29 10:47:42
காட்டு வளவு ஜீவன்(தம்பி)
அண்ணா---
அன்று நான் உன் பின்னால் நடந்த நாட்களை கடந்து இன்று உன்னை இழந்த வலியோடு உன் நினைவுகளின் பின்னால் நடக்கிறேன்
2026-05-29 21:35:46
ஆனந்த் நடராசா (மச்சான் )
என் மச்சானின் மூச்சு நின்ற செய்தி அறிந்து நிலை குலைந்தவர்களில் நானும் ஒருவன் 😢ராசுக்குட்டிக்கும் எனக்கும் இருந்த நட்பு சொல்லில் அடங்காது , பல நூறு நினைவுகள் தன்னை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கவைப்பார் அவரின் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்திக்கின்றன்🙏🏼 குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் 😢 நானும் உங்கள் துயரத்தில் கலந்துள்ளேன் கனத்த இதயத்துடன் …
ஆனந்த்
2026-05-31 17:25:20
வரதநாதன் (திவ்யா பிரவிணன் மாமன்)
மறைந்த நடராஜா அவர்களுக்கு இதயபூர்வ அஞ்சலி!
ஆத்மா சாந்தி அடைவதாக!
2026-05-31 17:25:59
Barath (Rathidavi son)
Rest in peace Rassu kutty mama , hope you will find peace where you are now ...
2026-06-01 20:51:50
Barath (Rathidavi son)
Rest in peace Rassu kutty mama , hope you will find peace where you are now ...
2026-06-01 20:51:58